திம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம்
திம்பம் மலைப்பாதையில் பனி மூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 11:19 GMT
பனிமூட்டம்
திம்பம் மலைப்பாதையில் பனி மூட்டத்தால் அவதி தாளவாடி, ஆசனுார், திம்பம் உள்ளிட்ட பகுதி களில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் திண் டாடி போயினர். முகப்பு விளக்குகளை எரிய விட்டாலும், சில அடி துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.