கிக்கிற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். - துரைமுருகன்

உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால் , கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

Update: 2024-06-30 08:12 GMT

 அமைச்சர் துரை முருகன் 

சட்டப்பேரவையில் பூரண மதுவிலக்கு வேண்டும் என ஜி.கே மணி பேசியதற்கு பதிலளித்த அவை தலைவர் துரைமுருகன், பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர் , ஆனால் அப்போதே கருணாநிதி கூறியிருந்தார் . கர்நாடகா , கேரளா , ஆந்திரா , புதுச்சேரி என சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும்போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்? என உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.

ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால் , கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு soft drink போல மாறிவிடுகிறது. எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர் . அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத் தான் திருந்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம் . ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். என்றார்.

Tags:    

Similar News