ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்கனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-30 10:38 GMT

Meteorological Center Director Balachandran

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்கனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கிறது. மயிலாடுதுறை முதல் திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னை நுங்கம்பாக்கத்தில் காலை 5 மணி முதுல் 8.30 மணி வரை 45 மிமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இதுவரை 95 மி.மீ, நந்தனம் 82 மி.மீ, கொளப்பாக்கம் 102 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நாளை சென்னை, திருள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சியில் கனமழை பெய்யும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 கி.மீ வேகத்தில் இருக்கும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News