கோடைகால சிறப்பு ரயில்கள்
கோடைகால சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் புதிய அட்டவணையையும் தென்னக இரயில்வே வெளியிட்டுள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 11:51 GMT
கோப்பு படம்
இரயில் எண் 06070 / 06069 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வார சிறப்பு இரயிலானது. இரயில் எண் 06070 திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர்க்கு இயக்கப்பட உள்ள வார சிறப்பு இரயிலானது ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 க்கு சென்னைக்கு புறப்படும் எனவும் இந்த இரயில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இரயில் எண் 06069 சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வார சிறப்பு இரயிலானது ஜூன் 7,14,21,28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் எனவும் இந்த இரயில் திருநெல்வேலிக்கு காலை 7.10 மணிக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.