தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

பாராளுமன்ற தேர்தலில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-16 03:35 GMT

பைல் படம்

2024 – பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கம் – 16/04/2024 மற்றும் 17/04/2024 அன்று முன்கூட்டியே பயணம் மேற்கொள்ள வேண்டுகோள். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். 

2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் 18/04/2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பாண்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. 16/04/2024 மற்றும் 17/04/2024 ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகளின் முன்பதிவு விபரம் நாள் முன்பதிவில் உள்ள இருக்கைகள் முன்பதிவு செய்துள்ள இருக்கைகள் காலியாக உள்ள இருக்கைகள் 16/04/2024 30,630 1,022 29,608 17/04/2024 31,308 6,475 24,833 எனவே, 18/04/2024 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 16/04/2024 மற்றும் 17/04/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News