கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-11-26 10:13 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று தீப திருவிழா நடக்கிறது. மேலும், இன்று மாலை பவுர்ணமி துவங்குகிறது. தீப திருவிழாலும், கிரிவலத்திலும் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கூடுவர். இதையொட்டி, திருவண்ணாமலைக்கு, கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் 2, சின்னசேலம், சங்கராபுரம் டெப்போக்களில் இருந்து 25 அரசு பஸ்கள் கூடுதலாக இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News