ராணிப்பேட்டை சிறப்பு மனுநீதி நாள் முகாம்

ராணிப்பேட்டை சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 117 பயனாளிகளுக்கு 63 லட்சத்து 60 மதிப்பீட்டில் நலதிட்டம் உதவி அமைச்சர் காந்தி வழங்கினார்.;

Update: 2023-12-13 14:08 GMT

நலத்திட்ட உதவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக அரசு பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருவதாக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.. ராணிப்பேட்டை மாவட்டம், நந்தியாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, வருவாய் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மை துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் 117 பயனாளிகளுக்கு 63 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார். தொடர்ந்து

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர் காந்தி, தமிழக அரசு பல்வேறு புதிய புதிய திட்டங்களின் மூலம் மக்களுக்கு எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறது எனவும் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை பாகுபாடுயின்றி அரசு நிறைவேற்றி வருகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் அரசை தேடி சென்ற காலம் போயி இன்று மக்களை தேடி அரசு சென்று மக்களில் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News