சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 12:22 GMT
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை
காலபைரவாஷ்டமி தினத்தை முன்னிட்டு சேலம் ஸ்ரீ சுகவனேசுவரர் ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு அஷ்டமி மகாயாக பூஜை இன்று காலை நடந்தது. விழாவை ஒட்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. இந்த யாகபூஜையில் 108 மூலிகைகள் போடப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது .
இதன் பின்னர் ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. முன்னதாக விநாயகர் பூஜை மற்றும் புண்யகால வாசனம், பஞ்சகாவ்யம், கலச ஆராதனம் ,அக்னி கார்யம், மூல மந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம் நடந்தது.
இதன் பிறகு கலசாபிரஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ கால பைரவரை வணங்கினர். ...