மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்;
Update: 2023-12-09 08:25 GMT
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
கள்ளக்குறிச்சியில்,மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை பள்ளிக் கல்வித் துறை உதவி திட்ட இயக்குனர் பழனியாப்பிள்ளை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். போட்டிகள் 14, 17, 19 வயதின் கீழ் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 120 பேர் பங்கேற்றனர். இதில் 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தனித் திறன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.