நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை ராணுவம்
நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் கோடியகரைக்கு கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-06-25 04:48 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரைபேட்டை மீனவகிராமத்தை சேர்ந்த அக்கரைபேட்டை திடீர்குப்பம் வெற்றிவேல் மகன் ஆனந்தன் 52என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 21/06/2024 அதிகாலை சுமார் 4-மணியளவில் 10 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றவர்கள் 25/06/24 சுமார் 1:30மணியளவில் கோடியகரைக்கு கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்து காங்கேசம் ** துரைமுகம் அழைத்து செல்லப்படதாக தகவல் அதன்படி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அக்கரைப் பேட்டை யை சேர்ந்த மதி (38.) த ராஜேஷ் (35) முத்து செட்டி (70 ) வைத்தியநாதன் (45) கலைமுருகன் ( 22 ) கீச்சாங்குட்டம் கோவிந்தசாமி ( 60) கடலூர் மணிபாலன் (55) ஆந்திராவை சேர்ந்த கங்கால கொருமையா (35 மற்ற 2 மீனவர்கள் ஆக மொத்தம் 10 மீனவர்கள் கைதானதாக கூறப்படுகிறது.