ஸ்ரீமதி வழக்கு - கோர்ட்டில் ஆஜரான தாளாளர்.. கதறி அழுத ஸ்ரீமதியின் தாய் !!!
கள்ளக்குறிச்சி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீமதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஆஜராயினர் அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர் தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து தமிழகத்தில் பல்வேறு விதமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட வந்தன கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் youtubeபர்கள் youtube சேனல்கள் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கனியாமூர் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ,பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர்கள் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பு உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து ஜாமீன் பெற்ற வேளையில் வந்தன.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்து வந்த சிபிஎஸ்ஐ ஐடி போலீசார் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை அடுத்து விசாரணை முடிவடைந்தது தொடர்ந்து 1152 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையானது நீதிபதி புஷ்பராணி முன்னேறையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இல்லை என தற்கொலைக்கான முகாந்திரம் மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மேலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்களின் தலையீடு இல்லை என சாட்சிகள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் மாணவியின் இறப்புக்கு காரணம் கிடையாது என சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றம் கையில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையங்களை ஏற்படுத்திய இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது பள்ளியின் தாளாளர் பள்ளி முதல்வர் ஆகியோர் ஆஜராகினர் அப்போது ஏற்கனவே அங்கும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் காத்துக்கொண்டிருந்தார். பள்ளி நிர்வாகிகளை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழ ஆரம்பித்தார். இதற்காகவா என் பிள்ளையை பெற்று வளத்தேன் என மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுத காட்சிகளை காண்போருக்கு கண் கலங்க வைத்தது.