செப்.28-ல் பனப்பாக்கத்தில் கார் உற்பத்தி ஆலைக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2024-09-16 06:42 GMT

Stalin

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13 ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் அமைய உள்ளது புதிய உற்பத்தி ஆலை. பனப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற உயர் ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. இத்தகைய வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக உள்ளது. மேலும் இந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மின்சார வாகனங்களையும் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதே போல், ரூ.400 கோடியில் 250 ஏக்கரில் அமையும் மெகா காலணி உற்பத்தி பூங்காவுக்கு செப்.28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். பனப்பாக்கத்தில் அமையும் மெகா காலணி உற்பத்தி பூங்கா மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News