திருக்கோயில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வலியுறுத்தி மாநில செயற்குழு கூட்டம்

Update: 2024-01-08 07:17 GMT

செயற்குழு கூட்டம்   

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமையில் சங்க காப்பாளர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இச்செயற்குழு கூட்டத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து பல திருக்கோவில்களில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் மாநில நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இச்செயற்குழு கூட்டத்தில் திருக்கோயில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும், விதி எண் 110-ன் கீழ் தினக்கூலி தொகுப்பு ஊதியம் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய 31.7. 2023 ஆம் தேதி முடிய காலத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் விடுப்பு சலுகை மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும், திருக்கோயில் பணியாளர்களுக்கு நிலை- 4 செயல் அலுவலர் பணிகளுக்கு 25% சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை விரைவில் வழங்க வேண்டும் என்றும், திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு திருக்கோவில் அருகையே கட்டி தர வேண்டும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில் பணியாளர் சங்கத்திற்கு என தனி அலுவலகம் வேண்டும் என்றும் இது போல பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக இந்த செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையிலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த தீர்மானங்களானது தமிழக முதல்வருக்கும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் துறை ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கைகளாக நாளை நேரில் சந்தித்து மனுவாக வழங்குவது என முடிவு செய்தனர்.

இதில் மாநில பொருளாளர் சேட்டு, மாநில அமைப்பாளர் குரு ராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வராஜ், உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் செந்தமிழ் செல்வி, மற்றும் சென்னை கோட்ட நிர்வாகிகள் கோட்ட தலைவர் தனசேகர், கௌரவத் தலைவர் வேலாயுதம், மாவட்ட செயலாளர் தாம்பரம் இரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் வியாசர்பாடி மனோகரன், துணைச் செயலாளர் அசோகன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் விஜயலட்சுமி, தேனாம்பேட்டை பகுதி தலைவர் மனோகரி, துணை தலைவர் சுப்புலட்சுமி, துணைச் செயலாளர்கள் காலடிப்பேட்டை சிவகாமி, ஓட்டேரி தனசேகர், துணைத் தலைவர்கள் தங்கசாலை சங்கர், குறளகம் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News