ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்!!

ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் வாடகைக்கு எடுத்து இயக்குகிறது.

Update: 2024-10-11 12:00 GMT

சிறப்பு பேருந்துகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் வாடகைக்கு எடுத்து இயக்குகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலைக்காக வந்து தங்கியிருப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை வந்து தங்கியுள்ள மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர். போக்குவரத்து துறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் ஒரு சில ஊர்களுக்கு பேருந்துகள் முறையாகவும், அதிக எண்ணிக்கையிலும் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பண்டிகை கால தேவையையொட்டி, தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, வேலூருக்கு ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் வாடகைக்கு எடுத்து இயக்குகிறது. இதேபோல் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இனி தொடர்ந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News