ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்ற தீர்ப்பு - மார்க்., கம்யூ வரவேற்பு
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாகவும், திறமையாகவும் மக்கள் நலன் காக்கப்படும் என்ற நோக்கத்தில் இருந்து வாதாடியதன் காரணமாக உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதாக வரவேற்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Update: 2024-03-01 01:16 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஸ்டெர்லைட் ஆலை துவங்கிய நாள் முதல் சுற்றுச்சூழல் சட்டங்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் சுற்றுப்புற மக்களின் உடல் நலத்தையும் நீர் ,நிலம் காற்றின் தன்மையை பாதுகாப்பதிலும் தொடர்ச்சியாக தான்தோன்றித்தனமான சட்ட மீறலையே ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தி வந்தது. இது மட்டும் இன்றி பல்வேறு விதமான நிதி முறைகேடுகளிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டது ஆலையின் நச்சு கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி நீரின் போக்கிற்கு தடையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாகவும் திறமையாகவும் மக்கள் நலன் காக்கப்படும் என்ற நோக்கத்தில் இருந்து வாதாடியதன் காரணமாக உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதாக வரவேற்கிறது. முழு மனதோடு சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.