வாகனங்களில் ஸ்டிக்கர் - மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க மறுப்பு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, வழக்கு மே 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Update: 2024-05-10 03:39 GMT
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதிக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் மனு தாக்கல் செய்திருந்தார். மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை மே 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.