திமுக மேயரால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக முகவர் இரட்டை இலை சின்னம் பதித்த மாதிரி நோட் பேடு வாக்குச்சாவடியில் வைத்திருந்ததை மேயர் ஜெகன் பெரியசாமி பிடுங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
Update: 2024-04-19 06:28 GMT
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி தங்கம்மாள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி தனது வாக்கை பதிவு செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி வருகை தந்தார். அப்போது அங்கு அதிமுக முகவர் மாதிரி சின்னம் பதித்த லட்டர் பேடு கையில் வைத்திருந்தார் அப்போது அதை பார்த்த மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாக அதை பிடுங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரியிடம் வாக்குச்சாவடி மையத்திற்குள் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்பது தெரியாதா அதை முறையாக நீங்கள் ஏன் பார்க்கவில்லை என கேட்டுக்கொண்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.