விதிகளை மீறி இயங்கும் கல் குவாரியை மூடவேண்டும்: பிரேமலதா

விதிகளை மீறி இயங்கும் கல் குவாரியை மூடவேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-10 06:36 GMT

பிரேமலதா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விதிகளை மீறி இயங்கும் கல் குவாரியை மூடவேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாக்குடி ஒன்றியம் ஓடக்கரை துலுக்கப்பட்டியில் 350 ஏக்கரில் மூன்று ஆண்டுகளாக கிரசர் மற்றும் கல்குவாரியும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இரண்டு ஆண்டு காலமாக போர் போடும் ராட்சத எந்திரங்களை கொண்டு 40 அடி முதல் 60 அடி வரை துளையிட்டு, தினசரி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இயங்குவதால் ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராம மக்கள் பச்சிளம் குழந்தைகளும், சிறு குழந்தைகளும், மாணவ மாணவிகளும், பெண்களும், ஆண்களும் என அந்த ஊரே தூக்கம் இல்லாம் அவதிப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வணிகம் செய்துள்ள கல்குவாரி, தமிழக அரசையும், கனிமவளத் துறையையும் ஏமாற்றுவதாக அந்தப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே கல்குவாரி விதிகளை மீறிச் செயல்படுவதால் உடனடியாக மூட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News