குமரியில் தொடரும் சூறை காற்று - மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரியில் சூறாவளி காற்று பலமாக வீசுவதால் நாளை வரை மீனவர்கள் மின் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-02 04:20 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாத நிலையில், சூறைக்காற்று வீசி வருகிறது. இந்த சூறைக் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் வயர்களும் அறுந்ததில். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியர்கள் உடனுக்குடன் பிரச்சனை சரி செய்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகள்,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் 3-ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் படகுகளை கரைகளில் ஒதுக்கி உள்ளனர்.