வடபழனி முருகன் கோவிலில் பூ பல்லக்கு வீதி உலா.
வடபழனி ஆண்டவருக்கு இன்று விசேஷ பூ பல்லக்கு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வடபழனி ஆண்டவருக்கு நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நிகழ்வு நேற்று விமர்சையாக நடைபெற்ற நிலையில் இன்று விசேஷ பூ பல்லக்கு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் 24 ஆம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலை நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, வீணை கச்சேரி, இசைச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.
வடபழனி ஆண்டவருக்கு நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் நேற்று விசேஷ பூ பல்லக்கு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. வடபழனி ஆண்டவர் திருக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் திருக்கல்யாணத்துடன் கொடி இறக்கப்பட்டது.
பத்தாம் நாளான நேற்று வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வள்ளி தெய்வானையுடன் பூ பல்லக்கில் வலம் வந்தார், பக்தர்கள் பல்லக்கை தோளில் தூக்கி சுமந்து வலம் வந்தனர்.