கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - ஜோதிமணி எம்பி

சமூகத்தைச் சீர்குலைக்கும் கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-20 02:19 GMT
கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - ஜோதிமணி எம்பி

 ஜோதிமணி எம்பி 

  • whatsapp icon
கருர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பதிமூன்று பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. சமூகத்தைச் சீர்குலைக்கும் இம்மாதிரியான கொடிய குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதும், இம்மாதிரியான கொடிய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin  உறுதியளித்திருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.  மீண்டுமொரு முறை இப்படியொரு கொடிய நிகழ்வு நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. நாம் அனைவரும் அதற்கு உறுதுணையாக நிற்போம். என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News