அனுமதி இல்லாத பார்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி
அனுமதி இல்லாமல் பார் நடத்துபவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
அனுமன்பள்ளி அருகேயுள்ள சென்னிப்பாளி என்ற இடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , காலி மதுபான பாட்டில்கள் பெற சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி , அதிகாரப்பூர்வமற்ற பார்கள் என்று எதுவும் இல்லை.அதிகாரப்பூர்வமற்ற பார்கள் என்று தவறாக சொல்கின்றனர்.தவறானது.சில பார்கள் விடமுடியாமல் பிரச்சனைகள் உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற வழிமுறைகள் படி ஏலம் விடப்பட்டுள்ளது.உரிமம் இல்லாமல் பார் நடத்தும் நிலை இல்லை.அது எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அப்படி அனுமதி இல்லாமல் பார் நடத்துபவர்கள் மீதும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.