தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா?: சீமான்

தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-09-11 15:27 GMT

சீமான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன், அ.தி.மு.க.,வுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள். தி.மு.க.,வுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அரசு தான் தி.மு.க., அரசு. ஒரு 5 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்த்துக்கலாம். அப்படி தொட்டால், அன்னைக்கே பதவி விலகிடுவேன் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News