எண்ணூர் ரயில் நிலையத்தில் மாணவன் ரயிலில் சிக்கி பலி
எண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடிக்கு கல்லூரியில் நுழைவு படிவம் வாங்குவதற்காக சென்ற மாணவன் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.;
Update: 2024-05-14 03:54 GMT

பைல் படம்
எண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடிக்கு கல்லூரியில் நுழைவு படிவம் வாங்குவதற்காக சென்ற மாணவன் நடைமேடையின் இடைவெளியில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு. எண்ணூர் காமராஜ நகரை சேர்ந்தவர் முகமது நபில் (17) பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்காக ஆவடியில் உள்ள கல்லூரிக்கு நுழைவுப் படிவம் வாங்குவதற்காக இன்று எண்ணூர் ரயில் நிலையம் வந்த நிலையில் தவறுதலாக பொன்னேரி செல்லும் ரயிலில் ஏறிய நிலையில் திடீரென ரயிலில் இருந்து இறங்கும்போது நடைமேடை இடைவெளியில் விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழப்பு கொருக்குப் பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.