பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-10-30 12:37 GMT
இறந்த மாணவன்
பூந்தமல்லி, கபாலி தெருவை சேர்ந்தவர் ராஜ் பாலாஜி .பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ராஜ்பாலாஜி பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ராஜ் பாலாஜிக்கு டெங்கு காய்ச்சல் சற்று சரியான நிலையில் உடலில் உப்பு அதிகமாக இருந்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.