அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-06 02:12 GMT

பைல் படம் 

இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து 2024 - 2025 கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இன்று  முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று இளநிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.tngasa.in என்கிற இணையதளம் மூலம் பெறலாம். மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News