மாணவர்களை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் : ஆட்சியர் பேச்சு

மாணவர்களை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் என கோடை கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆட்சியர் லட்சுமிபதி பேசினார்.

Update: 2024-05-27 14:22 GMT

மாணவர்களை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் என கோடை கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆட்சியர் லட்சுமிபதி பேசினார்.


இளைய தலைமுறையினரை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் கடந்த 20ம்தேதி தொடங்கி மே.26ல் நிறைவுற்றது. நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கி பேசியதாவது: கோவில்பட்டி அதிக எழுத்தாளர்களைக் கொண்ட கரிசல் பூமியாகும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் வாசகர் வட்டம் உருவாக்கி அதில் கரிசல் பூமி எழுத்தாளர்களை கலந்து கொள்ள செய்து மாணவர்களை ஊக்கப்படுத்தி படைப்பாளிகளாக உருவாக்கிட வேண்டும்.

மாணவர்களின் ஆற்றலை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது, இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களை படைப்பாளிகளாக உருவாக்கும் இடமாக மாறும் இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் உ.வே.சா. விருதாளர் நாறும்பூநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், தலைமை ஆசிரியர்கள் ஜெயலதா, சண்முகராஜ், ஜான்கணேஷ், செல்வராஜ், பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜான்சன், உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. கலந்து கொண்டனர். சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News