கள்ளச்சாராயம் விற்று மனம் திறந்து சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மானியம் வழங்கப்படும்

கள்ளச்சாராயம் விற்று மனம் திறந்து சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-22 03:02 GMT

அமைச்சர் முத்துசாமி

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக சுயதொழில் தொடங்க 50,000 மானியமாக வழங்கிடும் வகையில் ஐந்து கோடி மறுவாழ்வு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் மாநிலம் முழுவதும் உள்ள 45 மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனப் பதிவின் அடையாளம் காணும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை நிறுவப்படும். அமலாக்க பணியகம் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய நுண்ணறிவு பிரிவில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்படும். உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News