தரமில்லா பிரசாதம் : அறநிலையத்துறை நடவடிக்கை சரியே - உயர்நீதிமன்றம்

கோவிலில் தரம் இல்லாத பிரசாதம் வழங்கியதற்காக அனுமதியை ரத்து செய்து இந்து சமய அறநிலைத்துறை சரியான முடிவுதான் எடுத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-21 02:51 GMT

 தியாகராஜ சுவாமி கோவில்

சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில், தரம் குறைந்த, கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் அளித்தனர். புகாரையடுத்து பிரசாத விற்பனை செய்ய சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

அதற்கு, கோவிலில் பக்தர்களுக்கு தரமில்லாத பிரசாதம் வழங்கிய விவகாரத்தில் பிரசாதம் தயாரிப்பதற்கான ஒப்பந்த அனுமதி ரத்து செய்த இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கை சரியானது தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததை அடுத்தே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதில் தலையிட வேண்டியதில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News