பணிபரிவர்த்தனை கமிஷன் தொகை திடீர் குறைப்பு
வங்கிகளில் இருந்து முதியோர், விதவை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களை வழங்கி வரும் வங்கி முகவர்களின் கமிஷன் மற்றும் தொகுப்பூதியத்தை வங்கி நிர்வாகம் திடீரென குறைப்பு.
Update: 2024-04-18 10:48 GMT
அனைத்து வங்கியிலும் வங்கி முகவர்கள் நியமிக்கப்பட்டு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அரசு திட்ட உதவித்தொகைகளை அவர்களது கணக்கில் இருந்து நேரடியாக வீடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. வீடு தேடி வரும் ஏடிஎம்மாக செயல்பட்டு வருகின்றனர். வங்கியால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களான.இவர்களின் வேலை அனைத்து நாட்களிலும் பொதுமக்களின் தேவை அறிந்து உதவுவதாக உள்ளது. . 10 ஆண்டுகளுக்கு முன்பு பிசி அடிப்படை ஊதியமாக 100 பண பரிவர்த்தனைக்கு ரூ5000/ என்று இருந்தது. அதே போல பண பரிவர்த்தனைக்கு அவர்கள் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் வங்கியே கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் பிசி களின் அடிப்படை ஊதியம் சில வங்கியில் ரூ.1000/- ஆகவும், சில வங்கியில் ஒன்றும் வழங்கப்படாமலும் உள்ளது. தற்போது கமிஷன் தொகையும் 1லட்சம் பண பரிவர்த்தனைக்கு ரூ 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.அரசின் அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்லும் பாலமாக இருக்கும் விசி கள் கமிஷன் தொகையை முன்புபோல் வழங்கிட வேண்டும் .3 ஆண்டிற்கு ஒருமுறை ஒரு தொகையை கட்ட வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். வரும் காலங்களில் வங்கி முகவர்களின் நிலையை அறிந்து சிறந்த ஊதியம் பெறும் வகையில் மத்திய ,- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வங்கி முகவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.