யார்கோல் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கர்நாடக மாநில எல்லையிலுள்ள யார்கோல் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-06-15 07:20 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கர்நாடக மாநில எல்லையிலுள்ள யார்கோல் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

யார்கோல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள யார்கோல் அணையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மார்க்கண்டே நதியை கட்டப்பட்டுள்ள யார்கோல் அணை தற்போது 120 அடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News