ராணிப்பேட்டை இருவேறு இடங்களில் தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (34), அர்ச்சகர். இவர் அப்பகுதியில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயிலில் அர்ச்சகர் மற்றும் கோயில் கணக்கு வழக்குகளையும் நிர்வாகம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.
தகவல் அறிந்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் அங்கு வந்து, உயிரிழந்த கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மதிமங்கலம் ஏரிக்கரையில் அடையாளம் தெரியதா 60-வயது மதிக்க தக்க ஆண் சடலம் இருப்பதாக காவேரிப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபரின் பெயர், முகவரி ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.