ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் கோடை முகாம்
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் கோடை முகாமில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
Update: 2024-06-01 10:38 GMT
நெல்லை மாவட்டம் கோடகநல்லூரில் யோக் தொண்டு நிறுவனர் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் நடந்து வருகிறது. இதில் கிராமிய நடனம், கதைகள் சொல்லுவது, கதைகள் எழுதுவது, கைவினை பொருள்கள் செய்வது உள்பட பல்வேறு பயிற்சிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சியின் ஒரு நாளாக தொல்லியல் இடங்களை காணும் நிகழச்சி நடத்தினர். இதற்காக இந்த மாணவர்கள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காண வந்தனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். மாணவர்கள் சைட் மியூசியம் மற்றும் ஆகழாய்வு நடந்த குழிகளை பார்த்தனர். அதன் பின் வெள்ளூர் குளத்தில் உள்ள பறவை இனங்களை பார்வையிட்டனர். பறவை ஆய்வாளர் சந்திரசேகர் அடையாளம் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் யோக் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் வாசுதேவன், சித்ரா ஆய்வாளர் சுடலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.