கோடை சிறப்பு பயிற்சி; கொடைக்கானல் செல்லும் நீலகிரி மாணவர்கள்!

கொடைக்கானலில் நடக்கும், கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நீலகிரி மாணவர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.;

Update: 2024-06-03 14:47 GMT

கொடைக்கானலில் நடக்கும், கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நீலகிரி மாணவர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.


பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழிக்கவும், கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தளங்களில் நடத்தப்படுகிறது. பள்ளி பாடங்களைத் தவிர்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்றவற்றை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சிறப்பு முகாம் ஏற்காடு, கொல்லிமலை, கொடைரோடு- பழநி, குற்றாலம் என 4 இடங்களில் நடக்கிறது.

Advertisement

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் கொடைக்கானலுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் ஆசிரியர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழி அனுப்பி வைத்தனர். ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசித்தல், உடல் மொழி சார்ந்த பயிற்சி அளித்தல், மேடைப் பேச்சு, தமிழ் திறன்களை வளர்க்கும் வகையில் கருத்துப் பரிமாற்றம் சார்ந்த பயிற்சிகள், வானியல் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் -1 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ- மாணவிகளில், கலைத் திறன், தனித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 900 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 7-ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்ற மாணவர்களுக்கு இங்கு வந்து பகிர உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News