செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

Update: 2024-07-24 12:00 GMT

செந்தில் பாலாஜி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட, பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இன்றைய தினம் இன்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சரமாரி கேள்வி: பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை பதில் வாதம் வைத்தது.

நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அமலாக்கத்துறையால் இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால் நாளை தள்ளி வைக்கிறோம் பதில் கூறுங்கள் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News