கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

Update: 2024-05-29 06:49 GMT

கெஜ்ரிவால் 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில், "தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசர வழக்காகப் பட்டியலிட உச்சநீதிமன்றப் பதிவாளர் மறுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் இன்னும் 2 நாட்கள்தான் உள்ள நிலையில் அவரது மனுவை உச்சநீதிமன்றம் மற்றுத்துள்ளது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் பின்னரும் ஜாமீன் நீட்டிப்பு கிடைக்காமல் போனால் சிறைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News