கண்காணிப்பு கேமரா: உயர்நீதிமன்றம் கேள்வி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ அறிவுறுத்தல் வழங்கிய தகவல் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது.

Update: 2024-05-09 02:49 GMT
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம். மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பதிலை பதிவு செய்த உயர் நீதிமன்றம், எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது உத்தரவு மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் கண்கானிப்பு கேமரா செயலிழந்தது குறித்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் யாரும் இது தொடர்பாக வழக்கு தொடரவில்லையா என்று நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு கேள்வி எழுப்பியது. கண்கானிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News