பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-11 09:24 GMT

பொன்முடி - உச்சநீதிமன்றம்

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்ததை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிலை தண்டனை விதிக்கப்பட்டு அதன் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் அமைச்சர் பொன்முடி.இதனை அடுத்து மேல்முறையீடு செய்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று கூறிய தீர்மானித்தது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருக்கோவிலூர் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய ஆர் எஸ் பாரதி, " சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் பொன்முடி. இடைக்கால உத்தரவாக இருந்தாலும் பொன்மொழி வழக்கு இது முதற்கட்ட வெற்றி இறுதி வெற்றியை பொன்முடி பெறுவார்" என தெரிவித்தார்.

Tags:    

Similar News