தை அமாவாசை : காமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரத்தில் தை அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வங்க கடலில் புனித நீராடினர்.

Update: 2024-02-09 05:03 GMT
தர்ப்பணம் வழங்க குவிந்த மக்கள் 

மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினமும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி இன்று காமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எல்,நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர். அதனை தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள நவநீதீஸ்வரர் கோவிலுக்கு சென்று பக்தர்கள் அங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை தினத்தில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட அதிக அளவு பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News