ஓட்டுக்குப் பணம் வாங்குவதும் குற்றம் - சத்யபிரதா சாகு
ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.
Update: 2024-04-18 02:11 GMT
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பரப்புரை ஓய்ந்த நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார் அவர் பேசுகையில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது மட்டும் குற்றமல்ல. வாங்குவதும் குற்றம்தான்". அடுத்த 2 நாள்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுப்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் சாகு பேட்டியளித்தார்.