ஆபத்தை உணராமல் யானை அருகே போட்டோ எடுக்கும் மக்கள்!

ஆசனூரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி யானை அருகே போட்டோ எடுக்கும் காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Update: 2024-03-08 09:57 GMT


ஆசனூரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி யானை அருகே போட்டோ ஷூட் எடுக்கும் காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


ஆசனூரில் யானை அருகே நின்று போட்டோ ஷூட் எடுக்கும் காட்சி வைராலகி வருகிறது ஆசனூரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி யானை அருகே போட்டோ ஷூட் எடுக்கும் காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தி புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. கோடை தொடங்கும் முன்பாகவே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

வெப்பம் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காயத்தொடங்கி உள்ளன. மேலும் குளம், குட்டைகள் வறண்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் ரோட்டில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து நடமாடி கொண்டு இருந்தது. அப்பொழுது அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி யானையின் அருகில் சென்று ஆபத்தை உணராமல் யானையை ஒருவர் தனது மொபைல் போட்டோ எடுத்துள்ளார்.

இந்த காட்சியை பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து சிலர் கமெண்ட்ஸ்ல் ஆபத்தை உணராமல் யானையின் அருகில் சென்று வன விலங்குகளுக்கு தொந்தரவு தரும் நபர்கள் மீது வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்ட் செய்துள்ளனர்.

Tags:    

Similar News