விஜய் சேதுபதியின் மகாராஜா பட டிரெய்லர் வெளியீடு.
நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜாவின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 12:44 GMT
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் 'மகாராஜா'. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி உள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பவராக நடித்துள்ளார்.