தைவான் நாட்டு ஜோடிக்கு தமிழ் கலாச்சார டும் டும் டும்
தமிழர் கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்று காரணமாக சீர்காழியில் தைவான் நாட்டு காதல் ஜோடி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாங்கல்ய தாரணம் செய்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு , சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது . இத்தலத்திற்கு தமிழகம் மட்டுமன்றி வெளிநாட்டவரும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தைவான் நாட்டை சேர்ந்த யோங் ச்சென் , ருச்சென் ஆகிய இருவரும் காதலித்து தமிழ் கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்து முறைப்படி , தமிழகத்திற்கு வந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர் . அதன்படி சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்த இருவரும் சித்தர்களை வழிபட்டு பாத பூஜை செய்தனர்.தொடர்ந்து அவர்கள் வேத மந்திரம் முழங்க , மங்கள வாத்தியம் இசைக்க , அம்மி மிதித்து , அருந்ததிப் பார்த்து , மாங்கல்ய தாரணம் செய்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் .
தொடர்ந்து வெளிநாட்டு தம்பதிகளை திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கிராம மக்களை வணங்கி ஆசிபெற்றனர் மணமக்கள் இந்திய கலாட்சாரத்தின் மீதும் தமிழர் திருமணங்கள் குறித்தும் அறிந்த பின்னர் அதே முறையில் திருமணம் செய்ய நினைத்தாகவும் , அதன்படியே இங்கு சிறப்பாக தங்கள் திருமணம் நடைபெற்றதாவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்