சத்தியமங்கலம் அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா
சத்தியமங்கலம் அரசு கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது.;
Update: 2024-03-01 04:49 GMT
தமிழ் மன்ற விழா
சத்தி அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா. சத்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் கவிதை போட்டி பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை (பொ) தலைவர் டாக்டர், சிவக்குமார், தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் எண்ணமங்கலம் பழநிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோபி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் கருப்புசாமி கலந்து கொண்டார். போட்டிகளில் 9 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். விழாவில் டாக்டர் ஆனந்தக்குமார், டாக்டர் பரிதா, டாக்டர் சரவணபவா, டாக்டர்.வான்மதி, டாக்டர்.ஜேக் மார்ட்டின், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்.ரெஜினாள் மேரி, காளீஸ்வரி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.