தமிழ்நாடு பட்ஜெட் - விசைத்தறி சம்மேளனம் பாராட்டு

பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்பதாக தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

Update: 2024-02-20 01:36 GMT

மதிவாணன் 

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  சேலம், விருதுநகர் பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறோம். இதனால் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஜவுளி ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஜவுளி தயாரிப்பு தரமும் உயர்த்தப்படும். தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நியோ டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளர்கள். இதனால் உயர்தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக அமையும். இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்க பட்ஜெட். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News