தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றம்?

Update: 2024-08-22 06:30 GMT

ஸ்டாலின் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று முக்கிய அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டு 3 பேருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகின்ற 27 - ஆம் தேதி அரசுமுறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் மு.க ஸ்டாலின் செப் - 12 ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.

முதல்வர் ஸ்டாலின் தமது அமெரிக்கா பயணத்தின் போது தமிழ்நாட்டில் 500 நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட மொத்தம் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக 3 புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படுகிறதாம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள், திமுக பலவீனமாக உள்ள பகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனராம். அத்துடன் அமைச்சர்களது பலரது துறைகளும் பெரிய அளவில் மாற்றப்பட இருக்கிறதாம்.

Tags:    

Similar News