ரயில் மூலம் மயிலாடுதுறை சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர்
அரசு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எழும்பூரில் இருந்து ரயில் மூலம் மயிலாடுதுறை சென்றார்.
Update: 2024-03-04 00:56 GMT
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் மயிலாடுதுறை சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர். முதலமைச்சரை சந்திக்க ரயில் நிலையத்தில் குவிந்தனர். ரயில் நிலையத்தை சுற்றியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.