நாகை திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தனர்.

Update: 2024-01-22 02:49 GMT

விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இரவு 11 மணிக்கு விசைப்படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்தராஜேஷ் (42), பாஸ்கர் (40), நாகையன்(50), மாயவன் (42), பாக்கிய ராஜ் (42), சக்திவேல்(60), மணிகண்டன் (32), ராமச் சந்திரன் (38), கோதண்ட பானி(42), செல்வமணி (42), நம்பியார் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (38), திரு முல்லைவாசல் பகுதியை சேர்ந்த திவ்யநாதன் (25) ஆகிய 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படை கடந்த 9ம் தேதி இரவு 11 மணியளவில் கைதுசெய்தனர்.

இவர்களை பருத்திதுறை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி திருகோணமலை ஜெயிலில் அடைத்தனர். கடந்த 12ம் தேதி இலங்கை அரசு விசாரணை செய்து 12 மீனவர்களையும் விடுவிக்க உத்தர வுபிறப்பித்தது. இதையடுத்து 12 மீனவர்களும் நேற்று முன் தினம் (19ம் தேதி) இலங் கையிலிருந்து புறப்பட்டனர். விமானம் மூலம் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். 12 மீனவர்களையும் நாகப்பட் டினம் மீன்வள துறை ஆய்வாளர் குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு நாகப் பட்டினம் மீன்பிடிதுறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறு நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மீனவர்களை அவர்களது உறவினர்களிடம் கண் ணீர் மல்க வரவேற்று தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News