தமிழகம் தருவது 6 லட்சம் கோடி, திரும்ப கிடைப்பது 2.5 லட்சம் கோடி

தமிழ்நாடு ஆண்டிற்கு ரூ.6 லட்சம் கோடியாக ஒன்றிய அரசுக்கு செலுத்துகிறது. ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ.2.5 லட்சம் கோடியை மட்டும் நமக்காக ஒதுக்குகிறது. பாஜக ஒரே தேர்தல், ஒரே கலாச்சார மூலம் மோடியை இந்தியாவின் அதிபராக மாற்ற முயல்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Update: 2024-03-03 02:46 GMT
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம், முதல்வரின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பொன்னப்ப நாடார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்,  மேயர் மகேஷ் தலைமை வகித்தார்.  மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார்.

விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு கூறுகையில், - தமிழகத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் மிகவும் பாரபட்சம் காட்டுகிறது. ஆண்டிற்கு ஆறு லட்சம் கோடி வரியாக ஒன்றிய அரசுக்கு தமிழகம் செலுத்துகிறது. ஆனால் இந்திய அரசு வெறும் 2.5 லட்சம் கோடி மட்டும் நமக்காக ஒதுக்குகிறது.     ஒற்றை தலைமை என்பது வேறு ஒற்றுமையான நாடு என்பது வேறு. பாரதிய ஜனதாவை பொறுத்தவரை ஒரே தேர்தல் ஒரே கலாச்சார மூலம் ஒரே அதிபர் என மோடியை இந்தியாவின் அதிபராக மாற்ற முயல்கிறது என்று பேசினார்.  கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News