கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரணம் அறிவிப்பு !

Update: 2024-07-30 10:00 GMT

மு.க.ஸ்டாலின்

வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News